சி.ஐ.டி.யு.வினர் சாலை மறியல்
சி.ஐ.டி.யு.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என்ற பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்யும் தூய்மை பணியாளர், டிரைவர்கள், குடிநீர் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஸ்ரீதர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டபடி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 86 பெண்கள் உள்பட மொத்தம் 122 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.