கள்ளக்குறிச்சியில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சியில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் சாலை மறியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு வட்டதலைவர் விஜயகுமார் தலைமையில் கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சியில் சாலை மறியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சியில் சாலை மறியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story