தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்


தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
x

வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதாடு ஊராட்சியை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் சிலர் மருதாடு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. மேலும் செய்யும் வேலைக்கான கூலியும் சரிவர வழங்கப்படுவதில்லை. எனவே முறையாக வேலை மற்றும் கூலி வழங்கக்கோரி நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story