அனந்தபுரத்தில்தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்
அனந்தபுரத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சி தாலுகா அனந்தபுரம் பேரூராட்சியில் சமீபத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், நேற்று காலை இத்திட்ட பணியாளர்களுக்கு பணிகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அனந்தபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சமாதானம் செய்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story