பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
x

பத்தமடையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை போலீஸ் நிலையம் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகரச் செயலாளர் ஷேக் செய்யதலி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பத்தமடை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர்.

1 More update

Next Story