கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல் நடந்தது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டையில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிக்கூடத்தில் உளுந்தூர்பேட்டை நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலையில் போதிய பஸ் இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த நிலையில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் நேற்று மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒரு அரசு பஸ் வரவழைக்கப்பட்டு, அதில் மாணவர்களை எற்றி கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story