காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:30 AM IST (Updated: 27 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தூத்துக்குடி ஜார்ஜ்ரோடு தொம்மையார் கோவில் தெரு பகுதியில் கடந்த 2 வார காலமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஜார்ஜ் ரோட்டில் காலிக்குடங்களை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலைந்து சென்றனர்

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இன்னும் 2 நாட்களில் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு பகுதிகளை சரிசெய்து சுத்தமான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து சரிபார்ப்பு பணிகளை உடனடியாக நிறைவேற்றவும், புதிய வழித்தடத்தில் குடிநீர் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குடிநீர் குழாய் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

1 More update

Next Story