கலசங்களை தூக்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்


கலசங்களை தூக்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jun 2022 11:07 PM IST (Updated: 19 Jun 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

கும்பாபிஷேக விழாவில் கலசங்களை தூக்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே புதுப்பட்டில் மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த கலசங்களை தூக்கி எறிந்தனர். இதனால் அவர்களுக்கும் மற்றோரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பை சேர்ந்தவர்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கலசங்களை தூக்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மற்றொரு தரப்பை சேர்ந்த வர்கள் புகார் அளித்தனர். இருப்பினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த தரப்பை சேர்ந்த மக்கள் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story