குடிநீர் வசதி கோரி சாலை மறியல்


குடிநீர் வசதி கோரி சாலை மறியல்
x

அஞ்சுகோட்டையில் குடிநீர் வசதி கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி, பஸ் வசதி, சாலை வசதி கோரியும் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன், சந்திரமோகன், திருவாடானை போலீஸ்- இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Related Tags :
Next Story