கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியல்


கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியல்
x

பாணாவரம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

கழிவுநீர் கால்வாய்

பாணாவரம் பேரூராட்சியில் பாணாவரம் - காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக சாலையின் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்காமல் காலதாமதம் ஏற்படுவதால் பள்ளங்களில் கழிவுநீர் தேங்குகிறது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாணாவரம் ெரயில்வே மேம்பாலம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story