சாதிய வன்கொடுமையை கண்டித்து சாலை மறியல்


சாதிய வன்கொடுமையை கண்டித்து சாலை மறியல்
x

பெண்ணாடத்தில் சாதிய வன்கொடுமையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகில் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நாங்குநேரி, கே.லெட்சுமிபுரம், மேல்பாதி மற்றும் வேங்கைவயல் சாதிய வன்கொடுமையை கண்டித்தும், சாதிய பெயர் கொண்ட பள்ளி, கல்லூரிகளின் பெயர்களை நீக்குவதோடு, சாதிய மனோபாவம் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பத்மநாபன் தலைமை தாங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 34 பேரை கைது செய்து பெண்ணாடத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Next Story