பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்


பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x

நாங்குநேரி அருகே பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள ஏமன்புதுக்குளத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் அங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமஜெயம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டி, கட்சி நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story