ரூ.31.40 கோடியில் பார்த்திபனூர்-கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணி


ரூ.31.40 கோடியில் பார்த்திபனூர்-கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணி
x

ரூ.31.40 கோடியில் பரமக்குடி-கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ரூ.31.40 கோடியில் பரமக்குடி-கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

சாலை அமைக்கும் பணி

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் முதல் கமுதி வரை நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.31.40 கோடி மதிப்பீட்டில் 3.6 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பார்த்திபனூரில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி., நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசிவ குரூப்ஸ் முதல்நிலை ஒப்பந்தததாரர் தமிழ்ச்செல்வம் வரவேற்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் புறவழிச்சாலை அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பின்பு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சிறப்பான திட்டங்கள்

விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திராவிட இயக்கமாக தி.மு.க. மட்டும்தான் உள்ளது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார் முதல்-அமைச்சர். சாலை, பாலம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான சிறப்பான திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் தான் செயல்படுத்தப்படும்.

தற்போது அமைக்கப்படும் புறவழிச்சாலையால் பார்த்திபனூர், கள்ளிக்குடி, நரிக்குடி, அபிராமம், கமுதி ஆகிய பகுதிகள் பயன்பெறும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டும் வகையில் தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் லட்சுமணன், தி.மு.க. மாநில தீர்மானக்குழு துணை தலைவர் சுப.த.திவாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, பூமிநாதன், பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், சந்திரசேகர், போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி, அண்ணாமலை, பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சண்.சம்பத்குமார், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பிரகாஷ் துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொழிலதிபர் ராமுயாதவ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story