ரூ.62¼ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.62¼ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில்ரூ.62¼ லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை ஓசூர் பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் தொகுதிக்குப்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 62.33 லட்சம் மதிப்பில் பல்வேறு சாலை பணிகளுக்கு பூமிபூஜை நடைடபெற்றது. இதில் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஓசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் வீரபத்திரப்பா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story