சங்கராபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி


சங்கராபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

சிவகங்கை

காரைக்குடி

சாக்கோட்டை யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட கே.கே. நகரில் உள்ள பூங்காவிற்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து இந்த சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தார்ச்சாலை அமைக்கும் பணியும், இதேபோல் ஜெய்ஹிந்த்நகர் 2-வது வீதியில் ரூ.18 லட்சம் நிதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிமாங்குடி, ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், வார்டு உறுப்பினர் கணபதி மற்றும் அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story