ரூ.23 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.23 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் சாலை சேதம் அடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டர் விசாகன் மற்றும் கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் பெரும்பள்ளத்துக்கு சாலை அமைக்கும் பணிக்கு ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அங்கு சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விஜய சந்திரிகா, கண்ணன் வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், துணை தலைவர் வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் துரைப்பாண்டி நன்றி கூறினார்.


Next Story