ரூ.1 கோடியே 97 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.1 கோடியே 97 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 97 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கங்காதபுரம் ஊராட்சி பாலச்சேரிக்காடு - குண்டாமரைக்காடு சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். .அசோக்குமார் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் பாலச்சேரிக்காடு-குண்டாமரைக்காடு இணைப்பு சாலை தார்ச் சாலையாகவும், மேலும், புதிய பாலம் கட்டவும் ரூ.68 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதேபோல் முதல்-அமைச்சர் கிராமச் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.59.07 லட்சம் மதிப்பீட்டில் குருவிக்கரம்பை ஊராட்சி அரசரடி செல்வ விநாயகர் கோவில் - வி.எம்.டி பாலம்-மெய்யப்ப சுவாமி கோவில் இணைப்பு சாலையை தார்ச்சாலை அமைக்கும் பணியையும், நாடியம் ஊராட்சியில் காஞ்சிராங்கொல்லை சாலை ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.சடையப்பன், வ.கந்தசாமி,சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story