ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x

நத்தம் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் நத்தம் கிராமத்தில் இருந்து ஈஸ்வரன் கோவில் வரை ரூ.15 லட்சத்தில் புதிய பேவர் பிளாக் அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.பிரபாவதி, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பூஜை போட்டு திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மோகன்குமார், ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story