ரூ.43 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ.43 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் விலக்கில் இருந்து கொம்பன்குளம் வரை ரூ.19 லட்சம் மதிப்பிலும், வள்ளியூர் சாலையில் இருந்து தஞ்சைநகரம் வரை ரூ.24 லட்சம் மதிப்பிலும் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர்கள் புதுக்குளம் பாலமேனன், பண்டாரபுரம் பாலசிங் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பொன்பெருமாள் முன்னிலை வகித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பாலா, நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜாக்குலின், டாக்டர் ரமேஷ்பிரபு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், சாலை ஆயவாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.