குண்டும், குழியுமான சாலையில் மண்ணை போட்டு சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு
ுண்டும், குழியுமான சாலையில் மண்ணை போட்டு சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு
திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் பி.என்.ரோடு ஒன்று. ஆனால் அந்த சாலை சேதமடைந்து, பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக புதிய பஸ் நிலையம் முதல் பாண்டியன்நகர் வரை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக உள்ளது. ஒருசில இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதுடன், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை பெருமாநல்லூர்-திருப்பூர் சாலையில் போயம்பாளையத்திற்கும் பிச்சம்பாளையத்திற்கும் நடுவே குண்டும், குழியுமாக இருந்த ஒருசில இடங்களில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அற்புதம், தலைமைக்காவலர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு சாலை மிகவும் சேமடைந்து மோசமாக இருப்பதை அறிந்த போலீசார் சாலையோரம் இருந்த மண்ணை சாலையில் இருந்த குழிகளில் போட்டு சீரமைத்தனர். திருப்பூர் பி.என்.ரோட்டில் பல மாதங்களாக சாலை குண்டும், குழியுமாக இருந்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், நேற்று அனுப்பர்பாளையம் போலீசார் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சாலையை சீரமைத்ததை கண்ட பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினார்கள்.