காலேஜ் ரோட்டின் நடுவே திடீர் குழி


காலேஜ் ரோட்டின் நடுவே திடீர் குழி
x
திருப்பூர்


திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீர் குழி ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

திடீர் பள்ளம்

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் அருகே பாதாள சாக்கடை பதிக்கப்பட்டுள்ள இடத்தில் ரோடு திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால் நடுரோட்டில் ெபரிய குழி ஏற்பட்டுள்ளது. நேரம் செல்ல, செல்ல இந்த குழி பெரிதாகி கொண்டிருக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

மேலும் ரோட்டில் ஆங்காங்கே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்கும் வகையில் ரோட்டின் குறுக்காக இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் ரோட்டில் ஏற்பட்டுள்ள குழி மேலும் பெரிதாக வாய்ப்பு உள்ளது.

விபத்து அபாயம்

திருப்பூரில் இருந்து சிறுபூலுவப்பட்டி, கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம், மங்கலம், அவினாசி ஆகிய பகுதிகளுக்கு இந்த ரோடு வழியாக அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன. இவ்வாறு எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் சற்று கவனம் தவறினாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த ரோடு குறுகலாக இருப்பதால் இவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story