சாலை பராமரிப்பு சரியில்லை; பொதுமக்கள் புகார்
சாலை பராமரிப்பு சரியில்லை; பொதுமக்கள் புகார்
வீரபாண்டி
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்லக்கூடிய சாலையில் குடிநீர் குழாய், கேபிள் மற்றும் பாதாள சாக்கடைக்கான வேலைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்து பல நாட்களாகியும் சாலையை சீரமைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்தசாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சாலையில் செய்யப்பட்ட பராமரிப்பு பணிகள் சரிவர போடப்படாததால், சாலையின் நடுவில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு வகையான அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
பெண்கள் அந்த இடத்தை கடக்க முடியாமல் இறங்கி வாகனத்தை தள்ளி கொண்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிலர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன்பாக இச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும், தரமான சாலையை அமைக்க வேண்டும் என்றும், வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.