சாலை பராமரிப்பு ஊழியர்கள் நூதன போராட்டம்


சாலை பராமரிப்பு ஊழியர்கள் நூதன போராட்டம்
x

8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாைல பராமரிப்பு ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாைல பராமரிப்பு ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தினர் விருதுநகர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு காதில் பூ சுற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் லியாக்கத் அலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்.

காலி பணியிடங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாலை பணியாளர்களின் 40 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதிய பலன்களுக்கும், பணிக்கொடைக்கும் பொருந்தக் கூடிய அளவில் அரசு உத்தரவிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை உடனே வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கோட்டங்களில் காலியாக உள்ள 8,000 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாநில தலைவர் வெங்கிடு நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.


Next Story