சாலை வசதி கேட்டு பழங்குடியினர் கலெக்டரிடம் மனு


சாலை வசதி கேட்டு பழங்குடியினர் கலெக்டரிடம் மனு
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டா் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. உடுமலை தெற்கு ஒன்றிய பழங்குடியினர் அணி தலைவர் நடராஜ் தலைமையில் பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-உடுமலை தாலுகா மடத்துக்குளம் ஒன்றியம் ஜல்லிப்பட்டி, மானுப்பட்டி,ஈசல் திட்டு கிராமங்களில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளில் சாலை வசதி, கழிப்பறை வசதி இல்லை. அதில் பொன்னலம்மன் சோலை ரேஞ்சர் தோட்டம் முதல் குழிபட்டி வரை புதிய தார்ச்சாலையும், குழிபட்டி முதல் கீழ் குருமலை வரை தார்ச்சாலையும், கீழ் குருமலையிலிருந்து முதுவாக்குடி வரை கான்கிரீட் சாலையும், குழிபட்டி முதல் ஆத்துப்பாலம் வரை தார்ச்சாலையும், ஆத்துப்பாலம் முதல் பூச்சிகொட்டப்பாறை வரை கான்கிரீட் சாலையும், ஆத்துப்பாலம் முதல் காட்டுப்பட்டி வரை தார்ச்சாலையும், காட்டுப்பட்டி முதல் மாவடப்பு வரை தார்ச்சாலையும் அமைத்து கொடுக்க வேண்டும். அதுபோல் முதுவாக்குடி, மாவடப்பு, காட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுக்கழிப்பறை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story