பஸ் நிற்காததை கண்டித்துபொதுமக்கள் சாலை மறியல்
குடிமங்கலம் அருகே வேலாயுதகவுண்டன் புதூரில் பஸ் நிற்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் நிறுத்தம்
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டம்பட்டி ஊராட்சி. கொண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதகவுண்டன் புதூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வேலாயுத கவுண்டன் புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பஸ் நிறுத்தம் உள்ளது. வேலாயுதகவுண்டன் புதூரில் இருந்து அருகில் உள்ள சனுப்பட்டி வல்லகுண்டபுரம், ஆமந்தக்கடவு, அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
வேலாயுத கவுண்டன்புதூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வரும் நிலையில் வேலாயுதகவுண்டன் புதூர் பஸ்நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. உடுமலை திருப்பூர் நெடுஞ்சாலை அருகே வேலாயுதகவுண்டன்புதூர் உள்ளது.
பஸ் நிற்காததை கண்டித்து
பொதுமக்கள் சாலை மறியல்
உடுமலை திருப்பூர் நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள்சென்று வருகின்றன. வேலாயுதக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு சில பஸ்களை தவிர பஸ் நிற்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இது குறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் வேலாயுத கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்த