பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
திருப்பூர்


குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் 10 மணிநேரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

குண்டடத்தை அடுத்துள்ள தாராபுரம் -பூளவாடி செல்லும் சாலையில் தேர் பாதை அமைந்துள்ளது. இந்த பாதை 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய பகுதியாக விளங்குகிறது. இங்கு பஸ் நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் மது குடித்து விட்டு அலங்கோலமாக படுத்து கிடப்பதும், தகராறில் ஈடுபடுவதும் வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்திவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த டாஸ்மாக் கடை அருகே ரேஷன்கடை, வணிக வளாகங்கள் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான மக்கள் கூட்டம் இருந்து வருகிறது.

எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த சம்பவம் அறிந்து தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதாசலம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்தில் டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story