காங்கயம் அருகே தொட்டியபாளையத்தில்சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்


காங்கயம் அருகே தொட்டியபாளையத்தில்சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்
x

தொட்டியபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு சாலைகள் சீரமைக்கும் பணி

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே தொட்டியபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் வருகை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள படியூரை அடுத்த தொட்டியபாளையத்தில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை தாங்கி பேசுகிறார். அவருடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மேடை அமைக்கும் பணி

தற்போது இந்த கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் மேடை, அலங்கார பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனை அவ்வப்போது அமைச்சர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் இடம் படியூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஊத்துக்குளி ரோட்டில் அமைந்து உள்ளது.

சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

படியூர் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெறும் இடம் வரை சாலைகள் இருபுறமும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சாலையில் இருந்த குண்டு, குழிகள் தார் ஊற்றி ஜல்லிக்கற்கள் சமன் செய்யப்பட்டது.

சாலை ஓரத்தில் இருந்த முள் செடிகள், புற்கள், மண் திட்டுகள் பொக்லைன் எந்திரம் கொண்டு சரி செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.



Next Story