காதலித்து ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி சாலை மறியல்


காதலித்து ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 19 July 2023 12:45 AM IST (Updated: 19 July 2023 1:06 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் காதலித்து ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி பெண் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை,

காதல்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ்(வயது35) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்தநிலையில் மதன்ராஜ் அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தனது உறவினருடன் முத்துப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் மதன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மதன்ராஜ் கைது செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இதை கண்டித்து சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அவரது உறவினர்கள்மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story