காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடியில் மாணவிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
காரைக்குடி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டக்குழு சார்பில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காரைக்குடி சரக கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலில் கல்லூரி பொறுப்பு முதல்வர் துரை முன்னிலை வகித்தார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துத்துரை ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் அரிமுகந்தன், உதவிப்பொறியாளர் பூமிநாதன், அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முருகேசன், வரலாற்று துறைத்தலைவர் நிலோபர்பேகம், லதா, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அழகப்பா அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுந்தரி, தெய்வமணி, லெட்சுமணகுமார், சித்ரா மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.