சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உளுந்தூர்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமை தாங்கி விபத்துகளை தவிர்க்க சாலை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு, சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றதால் ஏற்பட்ட விபத்து தொடர்பான குறும்படங்களை ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story