சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x

வள்ளியூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிண்டு யோகேஷ் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது.

முன்னதாக சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சாலையில் செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, பள்ளி தாளாளர் துரைச்சாமி, தலைமை ஆசிரியை அனு, பள்ளி நிர்வாக அலுவலர் மகாராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story