சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கினார்.

கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வரை சென்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர்.

தொடர்ந்து கல்லூரி உள்ளரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கெட் ராகவன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

நிகழ்ச்சியை வாணியம்பாடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில் ஏற்பாடு செய்து இருந்தார். முடிவில் உதவி பொறியாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.


Next Story