சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x

விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி வைத்தியலிங்கநாடார் மேல்நிலைப்பள்ளியில் தேசியமாணவர்படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மாணவ, மாணவிகளின் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சுழி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் தங்கராஜ் தலைமை தாங்கினார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

இதில் ஆசிரியர்கள் செல்வராஜ், ராவணன், உதயசூரியன், சங்கரன், முத்துக்குமார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படைஅதிகாரி கதிரேசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கனகராஜ் செய்திருந்தனர்.


Next Story