சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.

விழிப்புணர்வு பேரணி

கூடலூரில் போலீசார் மற்றும் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம் வழியாக மெயின் ரோட்டை அடைந்தது. தொடர்ந்து புதிய பஸ் நிலையம் வழியாக தனியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தை அடைந்தது.

உறுதிமொழி ஏற்பு

பேரணியில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க கூடலூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களை ஓட்டும்போது அனைவரும் ெஹல்மெட் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பின்னர் சாலை பாதுகாப்பை கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் பேசும்போது, விபத்துகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். சாலை பாதுகாப்பில் கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்க கூடாது. அதிவேகமாக செல்லக்கூடாது என்றார்.


Next Story