திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் 'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் உள்பட பலர் மோட்டார் சைக்கிள்களுடன் வந்து கலந்துகொண்டனர்.

பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் பெரியார் சிலை, வடக்கு ரத வீதி, வாணிவிலாஸ், தாடிக்கொம்பு ரோடு, எம்.வி.எம் கல்லூரி, ஆர்.எம்.காலனி வழியாக வந்து அரசு ஆஸ்பத்திரி அருகில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது 'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ், ஜெயகவுரி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


Next Story