சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருமக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ஜெயசீலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துலட்சுமி இளங்கோவன், திருமக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சீட் பெல்ட் போட வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றக்கூடாது போன்ற வாசகங்களை கூறியபடி முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது.

1 More update

Next Story