சாலை பாதுகாப்பு வார விழா


சாலை பாதுகாப்பு வார விழா
x

சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சி.எம்.எஸ். பள்ளியில் இருந்து தொடங்கியது. இந்த பேரணியை விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி இருதய ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக சாலை பாதுகாப்பு உறுதிமொழியை அவர்கள் எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா மற்றும் சி.எம்.எஸ். பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story