தாராபுரம் சாலையை அகலபடுத்த மரங்கள் வெட்டி அகற்றம்


தாராபுரம் சாலையை அகலபடுத்த மரங்கள் வெட்டி அகற்றம்
x

தாராபுரம் சாலையை அகலபடுத்த மரங்கள் வெட்டி அகற்றம்

திருப்பூர்

உடுமலை

உடுமலை தாராபுரம் சாலையில், சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கிறது.

உடுமலை-தாராபுரம் சாலை

உடுமலை நகரில் தாராபுரம் நெடுஞ்சாலை ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதியை அடுத்து பெரியகோட்டை ஊராட்சி பகுதி உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் இருந்து சித்தகுட்டை பகுதி வரை தாராபுரம் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது.

மரங்கள் வெட்டி அகற்றம்

இதன் ஒருபகுதியாக இந்த ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனி, சங்கர்நகர் பகுதியில் தாராபுரம் சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையினரால்நேற்று (11.12.2022) மேற்கொள்ளப்பட்டது.வெட்டப்பட்ட மரங்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றிகொண்டுசெல்லப்பட்டன.


1 More update

Related Tags :
Next Story