வெற்றிலையூரணி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்


வெற்றிலையூரணி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்
x

கீழத்தாயில்பட்டியில் இருந்து வெற்றிலையூரணி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது.

விருதுநகர்

தாயில்பட்டி,

கீழத்தாயில்பட்டியில் இருந்து வெற்றிலையூரணி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது.

போக்குவரத்திற்கு இடையூறு

வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழத்தாயில்பட்டியில் இருந்து வெற்றிலையூரணி செல்லும் சாலை ஒரு வழி பாதையாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. எனவே இந்த சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் வெற்றிலையூரணி செல்லும் சாலையை சிவகாசி செல்வதற்கு மாற்று வழிச்சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

அகலப்படுத்தும் பணி

இந்தநிலையில் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் 2 கி.மீ. தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த 2 கி.மீ. தூரத்தில் 8 குழாய் பாலங்கள் அமைக்கப்படுகிறது.

மேலும் இப்பதியில் உள்ள 8 வளைவுகள் சரி செய்யப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் சென்று வர முடியும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story