செஞ்சி அருகே சாலை விரிவாக்க பணியை அதிகாரிகள் ஆய்வு

செஞ்சி அருகே சாலை விரிவாக்க பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
விழுப்புரம்
செஞ்சி,
தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக செஞ்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் ஆலம்பூண்டி - மழுவந்தாங்கல் சாலை விரிவாக்க பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியன குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவி, உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, செஞ்சிஉதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரதாஸ், இளநிலை பொறியாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story






