சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்
கோட்டூரில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோட்டூர்
கோட்டூரில் மலையாண்டிபட்டிணம், குமரன் கட்டம் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நடப்பதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைத்துறை மூலம் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சாலை அகலப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோட்டூரில் இருந்து தென்சங்கம்பாளையம் மற்றும் வால்பாறை ரோடு வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.