சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்

கோத்தகிரி-குன்னூர் இடையே சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டுவது, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்வது, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்வது, மழைநீர் கால்வாய்கள் அமைப்பது, பாலங்கள் பழுது பார்ப்பது, சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை முதல் கட்டபெட்டு வரை ரூ.50 லட்சம் செலவில் குறுகிய சாலைகளை விரிவாக்கம் செய்து, மழைநீர் எளிதில் வழிந்தோடும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. அந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதே போல நகரின் முக்கிய சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.