ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கியது


ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கியது
x

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கியது.

ஈரோடு


ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கியது.

சாலை மேம்பாட்டு பணிகள்

ஈரோடு மாநகர் பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முக்கிய சாலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

குறிப்பாக ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்கில் இருந்து செங்கோட்டையா மண்டபம் வரை பூந்துறை ரோட்டிலும், கருங்கல்பாளையம் காவிரி ரோட்டிலும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதேபோல் ஈரோடு ஈ.வி.என். ரோடு, ரெயில் நிலையம் ரோட்டிலும் மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளது.

அங்கு சாலையோரங்களில் சாக்கடை வடிகால் கட்டப்பட்டு, நடைமேடை அமைக்கப்பட உள்ளது. மின்சாரம் கேபிள், டெலிபோன் கேபிள் ஆகியன புதைவடங்களாக அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், இனிமேல் குழிகள் தோண்டப்படாத வகையில் குழாய்களும் பதிக்கப்பட்டு தார் சாலை போடப்படுகிறது.

மரங்கள் அகற்றம்

ஈரோடு ஈ.வி.என்.ரோடு, ரெயில் நிலையம் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் அகற்றும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தன. அப்போது 40-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இந்தநிலையில் சாக்கடை வடிகால் வசதி அமைக்கும் பணிகள் ஸ்டோனி பாலம் பகுதியில் தொடங்கப்பட்டது. அங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரமாக பொக்லைன் எந்திரங்கள் மூலமாக குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சாலையாக மாறும் வகையில் இந்த திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story