சென்னிமலை அருகே ஜல்லி கற்களை கொட்டி 2 மாதங்களாக தார்சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி


சென்னிமலை அருகே ஜல்லி கற்களை கொட்டி 2 மாதங்களாக தார்சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி
x

சென்னிமலை அருகே ஜல்லி கற்களை கொட்டி 2 மாதங்களாக தார்சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை எக்கட்டாம்பாளையம் அருகே உள்ள புதுவலசு மற்றும் தட்டாரவலசு ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊர்களுக்கு செல்ல கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார் ரோடு போடுவதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தார் ரோடு போடாததால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து புதுவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் தார் ரோடு போடுவதற்காக கடந்த 70 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை தார் ரோடு போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை ஜல்லி கற்கள் பதம் பார்த்து விடுகிறது. மேலும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் இந்த வழியாக பள்ளிக்கூட வேன்களில் செல்லும் குழந்தைகளும் பாதிக்கின்றனர். எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக தார் ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story