தார்ச்சாலை அமைக்கும் பணி தாமதம் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.


தார்ச்சாலை அமைக்கும் பணி தாமதம் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
x

சின்னிய கவுண்டன்புதூர் பகுதியில் தார்ச்ாலை அமைக்க தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

திருப்பூர்

சின்னிய கவுண்டன்புதூர் பகுதியில் தார்ச்ாலை அமைக்க தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

சாலை மறியலுக்கு முயற்சி

திருப்பூர் மங்கலம் சாலை 39-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சின்னியகவுண்டன் புதூர் பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பாக குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த ஒரு பணிகளும் முடிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த போதுமக்கள் நேற்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபடும் முயற்சி செய்தனர். இது பற்றி தகவல் அந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள்

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றோம். மேலும் சின்னியகவுண்டன்புதூர் பகுதியில் இருந்து ஆண்டிபாளையம் செல்லக்கூடிய சாலையில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கட்டில் போடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை தார் சாலை பணிகளும் நடைபெறவில்லை. அங்கன்வாடி உள்ள பகுதியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டும். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடமும், 39-வார்டு கவுன்சிலரிடமும் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் வாரத்தில் இதன் பணிகளை முடிக்கப்படவில்லை என்றால் மக்கள் ஒன்று திரண்டு 4ம் மண்டலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் விரைவில் பணிகளை முடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story