சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 1:05 AM IST (Updated: 12 July 2023 5:55 PM IST)
t-max-icont-min-icon

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்சி, டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தேவானந்தம் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாநில செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ள கோட்டப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பராமரிப்புப்பணி மேற்கொள்வதற்குரிய கருவி தளவாடங்கள், மழை கோட்டு, காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த சாலைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் முசிறியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் செல்வராசு வாழ்த்தி பேசினார். துறையூரில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு வட்ட தலைவர் கண்ணையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story