சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2023 1:00 AM IST (Updated: 7 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் நேற்று சேலம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க கோட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின் போது இறந்த வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story