சாலை பணியாளர் சங்க கூட்டம்


சாலை பணியாளர் சங்க கூட்டம்
x

வாலாஜாவில் சாலை பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜா உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உட்கோட்ட தலைவர் தாண்டவ மூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், நந்தகுமார், துரைகோவிந்தசாமி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சோமு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சிவசங்கரன் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்து பேசினார்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் 8-வது மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் பொருளாளர் பழனி நன்றி கூறினார்.


Next Story