சாலை பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு


சாலை பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
x

ஏலகிரி மலையில் சாலை பணிகளை தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ராயனேரி முதல் கீழ்காடு வரையும், அத்தனாவூர் முதல் கோட்டூர், பள்ளக்கணியூர், ஐயம்பாறை வரையும், பாடனூர் முதல் புத்தூர், தாயலூர் வரையும் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது திட்ட இயக்குனர் கு.செல்வரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணைத் தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சங்கர், மணிமேகலை, ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story