திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் தார்சாலை பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆய்வு
திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் தார்சாலை பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் தார்சாலை பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் ரூ.21 கோடி செலவில் பல்வேறு தெருக்களில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது தற்போது தார் ரோடு பணிகள் நடைபெற்று வரும் 17-வார்டு பொன்னு கிருஷ்ணன் சாமித்தெரு, சேர்மன் ரங்கநாதன் தெரு, வட அக்ரகாரம் தெரு, தென் அக்ரகாரம்தெரு, ஆகிய தெருக்களில் போடப்பட்ட புதிய தார் சாலைகளை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் ஓரங்கள் ஜல்லி சரியாக ரோலர் வைத்து அழுத்தப்படாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதாகவும் சிறிய ரோலர் வைத்து சரி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். உடனடியாக அதிகாரிகளிடம் இது பற்றி கேட்டபோது தற்போது மழை பெய்ர்த்து வருமவதால் மழைக்கு ஜல்லிக்கட்டு பெயர்ந்து உள்ளதாகவும் உடனடியாக சரி செய்வதாகவும் உறுதி அளித்தனர் அப்போது நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஆணையாளர் ஜெயராமராஜா, நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி, மேற்பார்வை பொறியாளர் கார்த்தி, நகராட்சி கவுன்சிலர் பிரேம்குமார் மற்றும் உடன் இருந்தனர்.